திமுக அரசைக்கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
திமுக அரசு தோல்வியடைந்துவிட்டதாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு:;
வடகிழக்குப் பருவ மழையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கோட்டை விட்டது போல தற்போது ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையிலும் திமுக அரசு கோட்டைவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டினார்
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஆணைக்கிணங்க பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு அளிக்கவும், அம்மா மினிகிளிக்கை திமுக அரசு மூடுவதை கண்டித்தும், விலைவாசி உயர்வை எதிர்த்தும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மதுரை அருகே வாடிப்பட்டியில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர், பி .உதயகுமார் பேசியதாவது: 1 கோடியே 46 லட்சம் வாக்குகள் பெற்று வலுவான எதிர கட்சியாக அதிமுக உள்ளது. ஆனால், எதிர் கட்சியை சர்வாதிகார போக்குடன் திமுக அரசு கையாளுகிறது. கடந்த ஏழு மாத திமுக ஆட்சியில் மக்களை கண்டு கொள்ளவில்லை. ஸ்டாலின் அண்ணாச்சி கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சு, நீட் தேர்வு என்ன ஆச்சு என்று மக்கள் கேட்கின்றனர்.கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் கூறிதைய நம்பி கடன் வாங்கிய ஏழை மாணவர்கள் பெற்றோர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 7 பேர் விடுதலையில் கூட மௌனம் விரதம் காட்டுகின்றனர்.பெட்ரோல் டீசல் விலை குறைப்போம் என்று கூறினார்,
குறைக்கவில்லை கேஸ் மானியம் 100 ரூபாய் வழங்வோம் என்று சொன்னார்கள் வழங்கவில்லை. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் விலைவாசி விண்ணை முட்டுகிறது. இதேஅம்மா ஆட்சி காலத்தில் விலை நிர்ணய நிலைப்பாட்டினை உருவாக்கி, இதற்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து விலைவாசியைக் குறைத்தார்கள். ஆனால், இதை செயல்படுத்த திமுக அரசுக்கு என்ன தயக்கம். மேலும், கட்டுமான பொருட்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் மற்ற மாநிலங்களில் தமிழகத்தில் 30 சகவீதம் விலைவாசி அதிகமாக உள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு அம்மா மினி கிளினிக் அட்சய பாத்திரமாக இருந்தது அதை மூடி விட்டார்கள். மேலும், தமிழகத்தில் பெய்த கனமழையால் விவசாயிகளின் நிலங்கள் தண்ணீரில் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை, எந்த நிவாரண உதவி அறிவிக்கவில்லை. விளை நிலங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. அதனால், விவசாயிகள் கண்ணீரில் தத்தளிக்கிறார்கள்.
ஒரு நம்பர் லாட்டரி தமிழகம் முழுவதும் உள்ளது. என்பதை அரசு மறுக்க முடியாது .அதேபோல் கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, வழங்க மறுக்கப்படுகிறது. மேலும், பொங்கல் பை, மளிகை சமான் வாங்குவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.பிரதான எதிர்க்கட்சி செயல்பாட்டிற்கும், கருத்துகளுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்று பேறிஞர் அண்ணா கூறினார். ஆனால், ஆளுங்கட்சி செயல்பாட்ட சுட்டிக்காட்டினால், எதிர்க்கட்சியை முடக்க மக்கள் தகுந்த பாடம் கொடுப்பார்கள் என்றார் ஆர்.பி. உதயகுமார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், கருப்பையா, ஒன்றிய கழகச் செயலாளர்கள் காளிதாஸ் ,கொரியர் கணேசன், ரவிச்சந்திரன், அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம்,பிச்சைராஜன், செல்லம்பட்டி ராஜா, நகரச் செயலாளர் பூமாராஜா, மாநில அம்மா ,பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், வெற்றிவேல், தனராஜன், பேரூர் கழகச் செயலாளர் ராஜேஷ் கண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா மகளிரணி லட்சுமி, வனிதா கோட்டைமேடு பாலா வாடிப்பட்டி மணிமாறன் மருத்துவ அணி கருப்பையா கொரியர் மணி பாசறை நாகராஜ் வா விட மருதூர் குமார் சோழவந்தான் சிவா மன்னாடிமங்கலம் ராஜபாண்டி வழக்கறிஞர முருகன் விக்கிரமங்கலம் பிரபு உள்ளிட்ட மதுரை மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.