சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்: முன்னாள் அமைச்சர் திறப்பு
அதிமுக சார்பாக அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்து வைத்தார்.;
சோழவந்தானில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திறந்து வைத்தார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பாக சோழவந்தான் மாரியம்மன் கோவில் முன்பாக கோடைகாலத்தை ஒட்டி நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், முன்னாள் வருவாய் துறை அமைச்சர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்து பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.
வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் முருகேசன், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் மகளிர் அணி மாவட்ட செயலாளர் லட்சுமி வரவேற்றனர்.
நிர்வாகிகள் வெற்றிவேல், வழக்கறிஞர்திருப்பதி, துரைதன்ராஜ், பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முகபாண்டியராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் நாச்சிகுளம் தங்கப்பாண்டி, கருப்பட்டி தங்கப்பாண்டி, தென்கரை ராமலிங்கம், நிர்வாகிகள் இளைஞர் அணி கேபிள் மணி ,பேருர் துணை செயலாளர் தியாகு, மருத்துவர் அணி கருப்பட்டி டாக்டர் கருப்பையா, மன்னாடி மங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி, குருவித்துறை பாபு, பத்தாவது வார்டு செயலாளர் மணி ஜெயபிரகாஷ், துரைக்கண்ணன்.
முன்னாள் கவுன்சிலர் தண்டபாணி, கச்சிராயிருப்பு முனியாண்டி, கீழ மட்டையான் ராமு.அண்ணா தொழிற்சங்கம் பாண்டி சக்திவேல், மாவட்ட பிரதிநிதி பாண்டியம்மாள் ராமநாதன், ஏழாவது வார்டு செயலாளர் டிரைவர் மணி, பாசறை அழகர் பேட்டை மாரி ராஜா, மாணவரணி விஜய் பாபு, பட்டணம் நைனார் முகமது, முள்ளி பள்ளம் சேது, மேலக் கால் காசிலிங்கம் மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் சோழவந்தான் பேரூர் வார்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்