தீபாவளிக்கு கட்சி நிர்வாகிகளுக்கு கோழி வழங்கிய அதிமுக ஒன்றியச் செயலாளர்.!

அதிமுக ஒன்றியச் செயலாளர் தீபாவளிக்கு கோழி வழங்கி கட்சி நிர்வாகிகளை அசத்தியுள்ளார்;

Update: 2023-11-11 12:00 GMT

கட்சி நிர்வாகிகளுக்கு பிராய்லர் கோழி வழங்கிய அ தி மு க ஒன்றிய செயலாளர்

தீபாவளி பண்டிகைக்காக கட்சி நிர்வாகிகளுக்கு  அ தி மு க ஒன்றிய செயலாளர் பிராய்லர் கோழி வழங்கி வியப்பில் ஆழ்த்தினார்.

மதுரை மாவட்டம் ,அலங்காநல்லூர் அதிமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் கல்லணை ரவிச்சந்திரன் ஆவார். ஏற்கனவே அலங்காநல்லூர் ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்துள்ளார் . தற்போது, ஒருங்கிணைந்த அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்து வருகிறார்.

இவர் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசு பொருட்களையும் தற்பொழுது  எதிர்க்கட்சியாக இருந்து வருகிற நிலையிலும், வேஷ்டி, சட்டை, ரொக்கம், பரிசு பொருட்களை வழங்கி அதிமுக கிளை நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவார். இந்த நிலையில் நடப்பு ஆண்டின் தீபாவளி பண்டிகைக்காக அதிமுக கிளை நிர்வாகிகளுக்கு இரண்டு கிலோ எடை அளவிலான பிராய்லர் கோழி வழங்கி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வு அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் பெரும் பேசு பொருளாக அமைந்துள்ளது.

அதிமுகவைப் பொருத்தவரை நிறுவனர் எம்ஜிஆரில் தொடங்கி ஜெயலலிதா வரை கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதில் சளைத்தவர்கள் அல்ல. எம்ஜிஆர் காலத்தில் அவரைப் பார்த்தாலே அதிருஷ்டம் என்கிற நிலை இருந்தது. அவருக்கு பின்னர் கட்சியின் பொதுச்செயலரான ஜெ.ஜெயலிதாவும் கட்சித் தொண்டர்களுக்கு  தனது நடவடிக்கைகள் மூலம்  தாயாகாவே மாறினார். அவரது பாசத்துக்கு கட்டுப்பட்ட தொண்டர்கள் அவரை அம்மா என்றே அழைத்து வந்தனர். தீபாவளி, பொங்கல்  போன்ற பண்டிகை காலங்களில் தொண்டர்களை பல்வேறு வகைகளில் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பது அதிமுக கட்சியின் எழுதப்படாத விதியாக இன்று வரை தொடர்கிறது.

தற்போது பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியும் தொண்டர்களிடம் அன்பு காட்டுவதில் சளைத்தவரல்ல என்பதை அவரது நடவடிக்கைகள் மூலம்  நிரூபித்து வருகிறார். அந்த வகையில் அவரது வழிகாட்டுதலில் அதிமுக நிர்வாகிகள் கட்சி தொண்டர்களிடம் கனிவுடன் பரிவுடன் இதுபோன்ற செயல்கள் மூலம்  அரவணைத்துச் செல்கின்றனர் என்றால் அது  மிகையில்லை..

Tags:    

Similar News