அலங்காநல்லூர் அருகே அதிமுக பொதுக்கூட்டம்: முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு
முன்னதாக திமுகவை சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்;
மதுரை மேற்கு(தெற்கு) ஒன்றிய அதிமுக சார்பில், பாசிங்காபுரம் சாய்பாபா கோவில் அருகில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 52வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கூட்டுறவுத் தலைவர் மலர்கண்ணன், மாவட்ட பிரதிநிதி சுவாமிநாதன் ஆகியோர் வரவேற்றனர்.
முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு, அதிமுக அரசின் 52 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசினார். முன்னாள் எம்எல்ஏக்கள் கருப்பையா, மாணிக்கம், தமிழரசன், சரவணன், மாவட்ட விவசாய அணி ராம்குமார், மாவட்ட மகளிரணி லட்சுமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திமுகவை சேர்ந்த 20ககும் மேற்பட்டோர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுக வில் இணைந்தனர். அவர்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சால்வை அணிவித்து வரவேற்றார். முடிவில், பொதும்பு கிளைச் செயலாளர் ராகுல் நன்றி கூறினார்.