சோழவந்தான் பேரூராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சோழவந்தான் புதிய பேருந்து நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைப்பதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு;
சோழவந்தானில் புதிதாக கட்டியுள்ள பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சோழவந்தான் பேரூராட்சி மாதாந்திர கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இரண்டாவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட புதிதாக கட்டியுள்ள பேருந்து நிலையத்திற்கு முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதியின் பெயரை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் ஒன்றிய கழகச் செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில், வசந்தி கணேசன், சரண்யா கண்ணன், கணேசன் , ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் நிதிய ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட பேருந்து நிலையம் என்பதால் அதற்கு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்று என்ற கோரி வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.