அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட் டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2023-08-25 10:00 GMT

மதுரை மாவட்டம் குமாரம் அருகே ,இனிப்பு வழங்கிக் கொண்டாடிய ,மதுரை மேற்கு ஒன்றிய அதிமுகவினர்.

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்ற நீதிமன்ற  தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்:

அதிமுக பொது குழு செல்லும் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை வரவேற்று, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் . பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் கழக வார்டு நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர் .

இதில், பொதுக்குழு உறுப்பினர் க. நாகராஜன், சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், வாடிப்பட்டி யூனியன் தலைவர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் எம் .கே. முருகேசன், தென்கரை ராமலிங்கம்,

வார்டு கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி, பேரூர் துணை செயலாளர் தியாகு, 5வது வார்டு செயலாளர் அசோக், பத்தாவது வார்டு செயலாளர் மணிகண்டன்.

நிர்வாகிகள் துரை கண்ணன், ஜெயபிரகாஷ்,மாரி ,பேட்டைபாலா, மன்னாடி மங்கலம் ராஜபாண்டி ,பால் பண்ணை ராஜேந்திரன், பிரேம் சுரேஷ் ராஜா, பாலுசாமி, மணி, அழகர், ஜூஸ்கடை கென்னடி, பிஆர்சி மகாலிங்கம், முள்ளிப்பள்ளம் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை அருகே அதிமுக கொண்டாட்டம்:

பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை யொட்டி முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆணைக்கிணங்க மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் குமாரம் பிரிவில் ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பட்டாசு வெடிக்கும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Tags:    

Similar News