மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பாக அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனை வழங்கினார்;
வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பாக அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் ஆலோசனைகள் வழங்கினார்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பாக,திருவாலவாயநல்லூர், சி புதூர், சித்தாலங்குடி, கட்டகுளம், குட்லாடம்பட்டி, செம்மினிபட்டி ஆகிய ஊராட்சிக்கு, உட்பட்ட கிராமங்களில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ,வடக்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் கருப்பையா, மாணிக்கம், ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமிராஜேஷ்கண்ணா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பாசறை துணைச்செயலாளர் எம் கே மணிமாறன், கச்சைகட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆலயமணி ஆகியோர் வரவேற்றனர் . முன்னாள் அமைச்சர் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி. உதயகுமார், கலந்துகொண்டு,பூத் கமிட்டி ஆலோசனைகள் வழங்கினார். முன்னதாக, அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் வெற்றிவேல்,எம் ஜி ஆர் மன்ற மாநில நிர்வாகி ராமகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் திருப்பதி, பகுதி பொறுப்பாளர் தண்டலை மனோகரன் வாடிப்பட்டி பாலு ஆகியோர் பேசினார்கள்.
இதில், திருவாலவாய நல்லூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாலிக் சசிகுமார், சித்தாலங்குடி ஜெயக்குமார், கட்ட குளத்தில் வி எஸ் பாண்டி, பிரசன்னா, ரவி ராஜா, குட்லாடம் பட்டியில் சுந்தர்ராஜ், வீரூ,துணைத் தலைவர் நாகராஜ், செம்மினிபட்டியில் தக்காளி முருகன், தெய்வ பிரபு மற்றும் நிர்வாகிகள் சந்திரபோஸ் நாகமணி, கச்சை கட்டி மூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சராஜ், சசிகுமார், துரைப்பாண்டி . ஆகியோரும் சி.புதூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, பரந்தாமன் தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். ஆலோசனை கூட்டங்களில், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் . கலந்து கொண்டனர்.