சோழவந்தான் பேரூராட்சி வாரச்சந்தை ஏலம் எடுத்த அதிமுக: திமுகவினர் கொந்தளிப்பு
வார சந்தை ஏலம் திமுக ஆதரவுடன் அதிமுக நிர்வாகியின் தம்பிக்கு விடப்பட்டதால் உடன்பிறப்புகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது;
சோழவந்தான் பேரூராட்சி அலுவலகம்.(பைல் படம்)
வாரச்சந்தை ஏலத்தில் திமுகவின் உள்ளடி வேலைகளால் அதிமுகவினர் வென்றதால் திமுகவினர் கொந்தளித்து போயுள்ளனர்.
சோழவந்தான் பேரூராட்சி தினசரி மற்றும் வார சந்தை ஏலம் திமுக ஆதரவுடன், அதிமுக நிர்வாகியின் தம்பிக்கு விடப்பட்டதால் உடன்பிறப்புகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம்,சோழவந்தான் பேரூராட்சி வார சந்தை மற்றும் தினசரி சந்தை ஏலம் கடந்த ஆண்டு முதல் இழுபறியாக இருந்து வந்த நிலையில், கூடுதல் தொகையுடன் ஏல விடப்பட்டது. இதனால், பேரூராட்சி நிர்வாகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி, முன்னாள் திமுக நகரச் செயலாளர் முனியாண்டி என்பவர் ரூபாய் 15 லட்சத்திற்கு ஏலம் எடுத்து முழுத் தொகையையும் கட்ட தவறியதால், டெபாசிட் தொகையையும் இழந்து ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இதை யடுத்து, ஜனவரி 5 ஜனவரி 25 பிப்ரவரி 22 ஆகிய தினங்களில் நடந்த ஏலத்தில் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், ஏலத்தை அடுத்தடுத்து ஒத்திவைத்து வந்த நிலையில் இன்று செயல் அலுவலர் தலைமையில் நடந்த ஏலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், ஆண்டு ஒன்றிற்கு கூடுதலான தொகையில் கேட்ட சுரேஷ் என்பவருக்கு ஏலம் கொடுக்கப்பட்டது. சுரேஷ் என்பவர் ஏற்கெனவே 30 ஆண்டுகளாக ஏலம் எடுத்து வந்த அதிமுக நிர்வாகி ரவியின் தம்பி ஆவார். இந்த ஏலத்தில் தினசரி சந்தை 3.65 லட்சம் வார சந்தை 1.41 லட்சமும் பேரூராட்சியின் கணக்கில் கூடுதலாக வரவு வைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. திமுக ஆட்சியில் முன்னாள் திமுக நகர செயலாளர் முனியாண்டியை ஓரங்கட்டி, திமுகவினர் ஆதரவுடன் அதிமுக ஆதரவு பெற்ற சுரேஷ் என்பவருக்கு ஏலம் கொடுத்தது திமுக உடன் பிறப்புகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.