சோழவந்தான் பகுதியில் அதிமுக, அமமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு

சோழவந்தான் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 36வது நினைவு நாள் அதிமுக, அமமுக சார்பாக அனுசரிக்கப்பட்டது;

Update: 2023-12-24 09:15 GMT

சோழவந்தானில், அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு.

சோழவந்தான் பகுதியில், முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 36வது நினைவு நாளை முன்னிட்டு, அதிமுகவினர் எம்.ஜிஆர் திருவுருவ படத்தை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சோழவந்தான் கடைவீதியில் முன்னால் பேரூராட்சி தலைவர் எம். கே. முருகேசன் தலைமையில் இளைஞர் அணி ஒன்றியச் செயலாளர் தண்டபாணி, ஊத்துக்குளி சேது, கண்ணன், பூக்கடை முருகன் ஆகியோர் எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதே போல், பேட்டைகிராமத்தில் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் மருதுசேது, கருப்பட்டி கிராமத்தில் மருத்துவர் அணி கருப்பையா மற்றும் ஒன்றிய கவுன்சிலர் தங்கபாண்டி,தேனூர் கிராமத்தில் சோனை முத்து, பாஸ்கரன், கொடிமங் கலத்தில் கருப்பணன், சி புதூர் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டுரங்கன், நாச்சிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் சுகுமாரன், மன்னாடிமங்கலம் கிராமத்தில் ராஜபாண்டி, இரும்பாடி மாவட்ட மகளிர் அணி செயலாளார் வழக்கறிஞர் லட்சுமி, குருவித்துறை மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், மேலக்கால் கிராமத்தில் காசிலிங்கம், ராஜபாண்டி உள்பட இப்பகுதியில் அதிமுகவினர்எம் ஜி ஆர் திருவுருவப்படத்திற்கு மாலைஅணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் அமமுக சார்பில் மரியாதை 

முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 36 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய கழகம் மற்றும் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பில் சோழவந்தான் மற்றும் கருப்பட்டி பகுதியில், எம்.ஜி.ஆரின் முழு உருவ சிலை மற்றும் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. கருப்பட்டியில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில், மாவட்ட நிர்வாகி வீரமாரி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன், நிர்வாகிகள் முனைவர் பாலு, ரஜினி பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சோழவந்தான் கனரா பேங்க் அருகில் எம்ஜிஆரின் உருவப் படத்திற்கு பேரூர் செயலாளர் திரவியம் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், ரபீக், எலெக்ட்ரீசியன் சுந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல், வாடிப்பட்டி ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட பல்வேறு கிளைக் கழகங்களிலும் சோழவந்தான் பேரூர் கழக வார்டு பகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் எம்ஜிஆரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Tags:    

Similar News