சோழவந்தான் அருகே கிராமங்களில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு!

சோழவந்தான் அருகே கூடுதல் ஆட்சியர், கிராமங்களில் ஆய்வு செய்தார்.;

Update: 2024-02-01 09:36 GMT

சோழவந்தான் அருகே கிராமங்களில், கூடுதல் ஆட்சியர் ஆய்வு.

மேலக்கால் தென்கரை முள்ளிபள்ளம் ஊராட்சிகளில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு :

சோழவந்தான்:

தமிழக முதல்வர் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் அரசு இயந்திரம் கவனத்திற்கு வரும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டப்படி, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் தாலுகா அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி மக்களை சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் முதல் முறையாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா நேற்று புதன்கிழமை சோழவந்தான் வாடிப்பட்டி அலங்காநல்லூர்

பகுதிகளில், ஆய்வு பணியை மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக, கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா,

மேலக்கால், தென்கரை, முள்ளிப்பள்ளம், ஊராட்சிகளில் கள ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.

மேலக்கால் ஊராட்சியில், குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணிகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு, அதன் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கச்சிராயிருப்பு, கீழ மட்டையான் பகுதிகளில், பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அறிந்தார்.

தொடர்ந்து, தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில், உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, முள்ளிபள்ளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்திற்கு அருகில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, நியாய விலை கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். இந்த நிகழ்ச்சியில், பிடிஓ கதிரவன் மற்றும் மேலக்கால் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் ,துணைத் தலைவர் சித்தாண்டி, ஊராட்சி செயலாளர் விக்னேஷ், வார்டு உறுப்பினர்கள் மற்றும் தென்கரை ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன், துணைத்

தலைவர் ஊராட்சி செயலாளர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முள்ளி பள்ளம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிவேல், துணைத் தலைவர் கேபிள் ராஜா ஊராட்சி செயலாளர் மனோபாரதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் மேலக்கால் கிராம நிர்வாக அலுவலர் மாசாணம் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News