தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு சோழவந்தானில் தொண்டர்கள் அஞ்சலி

இதில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.;

Update: 2023-12-28 17:15 GMT

சோழவந்தானில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி

சோழவந்தானில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மதுரை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் தேமுதிக நிறுவனரும் திரைப்பட நடிகருமான விஜயகாந்த் மறைவையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 

ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி தெய்வேந்திரன் முன்னிலை வகித்தனர்.தென்கரை கிளை செயலாளர் அம்பலம், குருநாதன், சரவணன், ராசி ஸ்டுடியோ கண்ணன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சோழவந்தான் மாரியம்மன் கோவில் பகுதி மற்றும் வட்ட பிள்ளையார் கோயில் பகுதி ஆகிய இடங்களிலும் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது இதில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கேப்டன் விஜயகாந்த் என பரவலாக அறியப்படும் விஜயராஜ் அழகர்சாமி எனும் விஜயகாந்த்,  திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி. இவர் 2011-16 காலகட்டத்தில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பாக, தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருந்தார். சில தமிழ் திரைப்படங்களை தாமே  தயாரித்து  நடித்துள்ளார் விஜயகாந்த்.

14 செப்டம்பர் 2005 அன்று மதுரையில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" எனும் தனது புதிய கட்சியை ஆரம்பித்தார். பின்னர் 2011ல் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இவர் பதவி வகித்த காலத்தில், வெளிநாடு களில் நட்சத்திர கலைவிழாக்கள் நடத்தி சங்க கடன்களை அடைத்தார். தீவிர உடல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இவர் டிசம்பர் 28, 2023 அன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.

Tags:    

Similar News