சோழவந்தான் அருகே தென்கரை அய்யப்பன் கோயிலில் ஆராட்டு விழா அன்னதானம்

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா நடந்தது

Update: 2023-12-16 13:15 GMT

தென்கரை அய்யப்பன் கோயிலில் நடைபெற்ற  ஆராட்டு விழாவில் பங்கேற்ற  பக்தர்கள்.

சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை அய்யப்பன் கோவிலில் கண்ணன் பட்டர் தலைமையில்  ஆராட்டு விழா  அதிகாலை யாகபூஜையுடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து யானை வாகனத்தில் அய்யப்பசுவாமி அலங்கரித்து அய்யப்ப பக்தர்கள் பக்திபாடல்கள் பாடிஆடி வந்தனர். வைகை ஆற்றில் ஏற்பாடு செய்யப்பட்ட மேடையில் அய்யப்ப சுவாமிக்கு பால்.தயிர் உட்பட 21 அபிஷேகங்கள் நடைபெற்று, நெய்அபிஷேகமும், புனித நீரால் மகா அபிஷேகமும்  நடைபெற்றது.

வைகை ஆற்றில் இடுப்பு அளவில் தண்ணீரில் அய்யப்பசுவாமி ஆராட்டு விழா நடந்தது.அங்கிருந்து அய்யப்ப பக்தர்கள் சரணகோஷம் போட்டனர். அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது அங்கு கூடியிருந்த பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று முழக்கமிட்டனர்.

பின்னர் கரையிலுள்ள மண்டகப்படிக்கு அய்யப்ப சுவாமி எழுந்தருளி அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது.மீண்டும் யானை வாகனத்தில் அய்யப்ப சுவாமி வலம் வந்து கோவிலை அடைந்தது. இங்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தென்கரை,முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம்,அய்யப்பநாயக்கன்பட்டி, குருவிதுறை, காடுபட்டி ஊத்துக்குளி,சோழவந்தான் ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.தென்கரை அய்யப்பன் கோவில் பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்

Tags:    

Similar News