சமயநல்லூர் பகுதியில் தொடர் வழிப்பறி திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

மதுரை சமயநல்லூர் அருகே லாரி டிரைவரை கத்தியால் குத்தி வழிப்பறி திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்அடைப்பு;

Update: 2021-12-21 14:45 GMT

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே லாரி டிரைவரை கத்தியால் குத்தி வழிப்பறி செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் ஜம்பு(21)  வருகிறார் இவர் நேற்று முன்தினம் மதுரையில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது சமயநல்லூர் அருகே வந்தபோது வழி தெரியாமல் தேனூர் சாலையில் சென்றுள்ளார் . அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த  பத்தாயிரம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர்.

இதனை தடுக்க முயன்ற போது ஜம்முவின் கையில் கத்தியால் குத்திி திருடர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதேபோல் பின்னால் வந்த தூத்துக்குடி கோவில்பட்டி திருநகர் பகுதியை சேர்ந்த செண்பகராஜ் வேன் ஓட்டி வந்துள்ளார் அவரையும் வழிமறித்து  கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவரிடம் ஒன்றும் இல்லாததால் அவரை மிரட்டி விட்டு அவரிடம் இருந்த செல்போனை  பறித்து சென்றுள்ளனர் .

இதனைத் தொடர்ந்து சமயநல்லூர் அருகே பாத்திமா நகரை சேர்ந்த அருள் ஆரோக்கியசாமி என்பவரின் வீட்டின் அருகே இருந்த மோட்டார் ரூமின் கதவை உடைத்து மோட்டாரை திருட முற்பட்டுள்ளனர்.எதார்த்தமாக ஆரோக்கியசாமி தனது மோட்டார் ரூமுக்கு சென்றபோது நான்கு திருடர்களும் மோட்டாரை திருட முற்பட்டுள்ளனர். இதனைக் கண்டு ஆரோக்கியசாமி சத்தம் போட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்ட திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் .

இந்த இரு வேறு சம்பவங்களில் சம்பந்தமாக சமயநல்லூர் போலீசாரிடம் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் மற்றும் ஆரோக்கியசாமி புகார் செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சமயநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது .அப்பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட தேனூர் சேர்ந்த ரஞ்சித் என்ற செபஸ்டியன் ராஜ் வயது 32, ,கிருஷ்ணகாந்த் வயது 22, அருன் வயது 24 ,விஜயகுமார் வயது 28. ஆகிய 4  சமய பேரையும்  சமயநல்லூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் சிறை காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News