மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபடாமல் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
அமைதி காத்து வரும் சசிகலா கடந்து சில தினங்களாக ஆன்மிக தலங்களுக்கு சென்று தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் மதுரையில் உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மாலை சாமி தரிசனம் மேற்கொண்டார். இதனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சசிகலாவை அமமுக கட்சி வேட்பாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.