கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை!
உசிலம்பட்டி ஆர்கே தெருவில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்கே தெருவில் வசித்து வருபவர் சரவணன்(35). இவர் நகைக்கடை தெருவில் நகைபட்டறை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கொரோனா முழு ஊரடங்கால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் கடன் தொல்லையால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி விஜி(24), மகள் அபி (5), மகாலட்சுமி (10), மகன் அமுதன்(6) ஆகிய ஐந்து பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.