அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்துகளை தடுப்பது குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செயல்முறை கருத்தரங்கு நடைபெற்றது.
மதுரை புதூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எதிர்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்து குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை செயல்முறை கலந்துரையாடல் கூட்டம் தென்மண்டல துணை இயக்குநர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து உதவி மாவட்ட அலுவலர் தரதளவு தொகுப்பு அலுவலர் செழியன் கலந்துகொண்டு மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு பற்றிய ஆலோசனைகள், மருத்துவமனைகளில் வைக்கப்பட வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.இதில் உதவி மாவட்ட அலுவலர்கள் செந்தில்குமார், வினோத், பாண்டி, நிலைய அலுவலர்கள் வெங்கடேசன் உதயகுமார் மற்றும் அரசு& தனியார் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.