மீன் சந்தையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
மதுரை கரிமேடு மீன் சந்தையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200ரூபாய் அபராதம் விதிப்பு
மதுரையில் இரண்டாம் கட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 15நாட்களில் 2000த்தை கடந்தது. இந் நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை சுகாதாரத்துறை தீவிரபடுத்தினர். அதன்படி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது அபராத தொகை விதிப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்தினர்.
மதுரை கரிமேடு மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மீன்களை வாங்க காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. சில்லரை மீன் கடைகளும் அளவுக்கு அதிகமாக போடப்பட்டிருந்தன. இந்நிலையில் அங்கு வந்த சுகாதாரத்துறை ஆய்வாளர் ராமநாதன் தலைமையிலான குழுவினர் கரிமேடு மீன் சந்தையில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த நபர்களுக்கும், பொதுமக்களுக்கும், மீன் வியாபாரிகள் சிலருக்கும் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் கொரானா வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கையாக மீன் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி பேனர் ஒன்றையும் வைத்து சென்றனர். அதனை மீறி கடைகள் வைப்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.