கொரோனா வார்டில் நோயாளிகளை உற்சாகப்படுத்த குத்தாட்டம் போட்ட விஜய் ரசிகர்கள்

Update: 2021-06-13 14:30 GMT

குத்தாட்டம் போட்ட விஜய் ரசிகர்கள்

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் பாடலுக்கு நடனமாடியும், அவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கியும் மகிழ்ச்சிப்படுத்தினர்.

மதுரை நரிமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட கொரோனா நோயளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற ஜூன் 22ம் தேதி வருவதையொட்டி மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த விஜய்யின் ரசிகர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்திக்க வருகை தந்தனர்.

பின்னர் அவர்கை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக கொரோனா வார்டுக்குள் பாதுகாப்பு கவச உடை அணிந்து அவர்களுக்கு முதலில் சத்தான உணவுகளை வழங்கியதோடு, விஜய்யின் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களும் விஜய் ரசிகர்களோடு சேர்ந்து நடனமாடியது நோயாளிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Similar News