ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 430 மதுபாட்டில்கள் பறிமுதல் - இருவர் கைது

Update: 2021-06-09 15:19 GMT

பறிமுதல் செய்யப்பட்ட மது பட்டில்கள்

மதுரை ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அதிரடி சோதனையில் 68 ஆயிரத்து 760 லிட்டர் கொள்ளளவு உள்ள 430 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில்கள் மூலம் வெளிமாநில மது பாட்டில்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் இன்று சோதனை மேற்கொண்டபோது 68 ஆயிரத்து 760 லிட்டர் கொள்ளளவு கொண்ட 430 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த அருண்குமார் (33), ஆண்டாள்புரத்தை சேர்ந்த சந்திரசேகரன் (33) ஆகிய இருவர் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டு, மதுரை மாநகர மதுவிலக்கு காவல்துறை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஊரடங்கு காலத்தில் ரயில் மூலம் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 732 மது பாட்டில்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் கொள்ளளவு 215.550 லிட்டர் ஆகும். இந்த சட்டவிரோத கடத்தல் தொடர்பாக இதுவரை 20 நபர்கள் மீது மதுரை ரயில்வே போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற செயல்கள் மேலும் தொடருமானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ரயில்வே போலீஸ் அறிவித்துள்ளது.

Similar News