மதுரையில் அதிமுக ஆட்சியில் நடந்த அநியாயம் இப்போது திமுக ஆட்சியிலும் தொடருகிறது.
மதுரை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் இட ஒதுக்கீடுகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தனக்கு வேண்டப்பட்ட தனக்காக செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு மதுரை மாட்டுத்தாவணி எதிர்ப்புறம் தல்லாகுளம் சர்வேயில் குறைந்த விலையில் வீட்டுமனை வழங்கினார்
அப்போது நியாயமான முறையில் நடுநிலையாக செய்திகள் வெளியிடும் தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் தினசரி நாளிதழ்களில் பணிபுரியும் செய்தியாளர்கள் என உண்மையான பத்திரிகையாளர்களுக்கும் தல்லாகுளம் சர்வேயில் இடம் ஒதுக்காமல் இறந்து போனவர்களுக்கும் பத்திரிக்கை துறையில் இல்லாதவர்க்கும் இடம் வழங்கினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட செய்தியாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கு தனி நீதிபதியிமிருந்து இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு மாறியது பின்னர் விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் மதுரை மாவட்ட நிர்வாகம் இடம் வாங்கிய பத்திரிகையாளர்கள் பணியில் உள்ளார்களா?? யாரேனும் இறந்து போனவர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடுகள் நடந்துள்ளதா? மதுரை தவிர வெளியூரில் பணியிலிருக்கும் நபர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடுகள் நடந்துள்ளதா?? என தீர விசாரித்து ஆறு வாரங்களுக்குள் பதில் தெரிவிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ஆனால் மதுரை மாவட்ட அதிகாரிகள் இதை எதையும் கண்டு கொள்ளாமால் நேற்று 06-06-2021 அன்று இறந்து போனவர்களுக்கும் வெளியூரில் பணியில் உள்ளவர்களுக்கும் செய்தியாளர்கள் அல்லாதவருக்கும் நீதிமன்ற உத்தரவை மீறி போலி நிருபர்கள் வீடு கட்ட மாவட்ட நிர்வாகம் என்ஓசி வழங்கி உள்ளது இந்த விபரம் புதிதாக வந்துள்ள மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் அவர்களுக்கு தெரியாது கீழ் உள்ள அதிகாரிகள் கலெக்டரையும் நீதிமன்றத்தையும் சேர்த்து ஏமாற்றி வருகின்றனர்.
காரணம் அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் அதிமுக அதிகாரிகள்தான் தற்போது மதுரையில் உள்ளார்கள் அதிமுக ஆட்சியில் நடந்த அநியாயம் இப்போது திமுக ஆட்சியிலும் தொடருகிறது !! என்று பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி சட்ட ரீதியான நடவடிக்கைக்கு தயாராகி வருகின்றனர் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மதுரையில் மாறவில்லை