பூஜாரி கொலை வழக்கு சிபிசிஐடி விசாரிக்க மனு.
கிராம பூஜாரி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வலியுறுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பூஜாரி மகன் மனு
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி வெள்ளையாபுரம் தெரு சூர்யா இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
உயர்நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது தந்தை செந்தில் இவர் கிராம பூஜாரியாக இருந்தார் .அவரை சிலர் ஆயுதங்களால் தாக்கி காரை விட்டு மோதி கொலை செய்தனர். எதிரிகளுக்கு அமைச்சரின் மறைமுக ஆதரவு உள்ளதால் நேர்மையாக விசாரணை நடக்க வாய்ப்பு இல்லை. எனவே சிபிசிஐடி போலீஸார் அல்லது வேரு விசாரணை அமைப்பிற்கு வழக்கை மாற்ற உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் .
இதனைத் தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.. இளந்திரையன் , இந்த மனு தொடர்பாக டிஜிபி, விருதுநகர் எஸ்பி, பந்தல்குடி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி, தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.