மதுரை அருகே மணல் கடத்திய லாரி, ஜேசிபி இயந்திரம் பறிமுதல்: ஓட்டுநர் கைது
மதுரை சாத்தையாறு அணை பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்திய லாரி மற்றும் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.;
மதுரை அருகே மணல் கடத்திய டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை அருகே சாத்தையாறு அணை பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தி செல்லப்படுவதாக பாலமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது .
தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனையிட்டனர். அப்பொழுது அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து ஓட்டுனர் அழகு மீது வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தல் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.