மதுரை அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் பதுக்கல் : 6 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை மாவட்டம் மேலூரில் சட்ட விரோதமாக 747 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.;

Update: 2022-01-26 14:12 GMT

பைல் படம்

மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இதுபோன்ற செயல்களை கட்டுப்படுத்த காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . பாஸ்கரன்  உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மாவட்ட தனிப்படை மற்றும் உட்கோட்ட தனிப்படையினருக்கும் மது பாட்டில்களை சட்டவிரோதமாக கடத்தி வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது..

அதனடிப்படையில் மாவட்ட தனிப் படையினர் இன்று நடத்திய அதிரடி சோதனையில் மேலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பதினெட்டாங்குடிசேர்ந்த ராஜு,  பிரகாஷ், கருப்பு ராஜா, செல்லச்சாமி,  மூர்த்தி ஆகியோர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை செய்ததில் 747 பாட்டில்கள் (1 பாட்டிலின் அளவு 180 மில்லி) சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது .

அதேபோல் ஊமச்சிகுளம் உட்கோட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விராதனூர் பகுதியில் சிந்தாமணியை சேர்ந்த சுகுமாரன் மகன் மணிகண்டன் என்பவர் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த சுமார் 137 பாட்டில்களை உமச்சிகுளம் உட்கோட்ட தனிப்படையினர் கைப்பற்றினர் மேலும் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மேற்படி மணிகண்டன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News