ராஜேந்திரபாலாஜிக்காக வாதாடியவர் வீட்டில் சோதனை: போலீஸாருக்கு நீதிபதி கண்டனம்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்காக ஆஜரானார் என்பதற்காக வழக்கறிஞர் வீட்டில் சோதனை செய்ததற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்குகளில் ஆஜரானார் என்பதற்காக வழக்கறிஞர் மாரீஸ் குமாரின் வீட்டில் சோதனை செய்தது ஏற்கத்தக்கதல்ல என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி .ஆர். சுவாமிநாதன் கண்டனம் தெரிவித்தார்.
ராஜேந்திரபாலாஜி வழக்குகளில் ஆஜரான வழக்கறிஞர் மாரீஸ்குமார் வீட்டில் கடந்த டிசம்பர் (29) தேதி எவ்வித அனுமதியும் இன்றி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ள முன்பாக விசாரணைக்கு வந்தது . மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் வழக்கறிஞரின் வீட்டில் சோதனை செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி வழக்கறிஞரின் வீட்டினுள் சென்று சோதனை செய்தார்கள் சோதனைக்கான வாரண்ட் இருந்ததா? என கேள்வி எழுப்பினார் .அதற்கு காவல்துறை தரப்பில் இல்லை என பதில் அளிக்கப்பட்டது.அவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கறிஞர் மாரிஸ் குமாரின் வீட்டில் சோதனை செய்தவை அன்று நடந்தவற்றை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து சோழவந்தான் காவல் ஆய்வாளர், மதுரை நகர் பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் மாரரீஸ் குமாரின் வீட்டில் சோதனை செய்தது எப்படி? என்பது குறித்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.