அணுசக்தி ஆய்வுக்கு இளைஞர்கள் எதிர்ப்பு
மதுரை மேலூர் அருகே மத்திய அணுசக்தி துறையினர் கனிமவளம் ஆய்வு நடத்த வந்த பொழுதுஇளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு;
மதுரை மேலூர் அருகேயுள்ள அய்வத்தன்பட்டியில் மத்திய அணுசக்தி துறையனர் கனிம வளம் குறித்து நடத்திய ஆய்வுக்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கம்பூர் ஊராட்சிக்குட்பட்ட அய்வத்தன் ப்ட்டியல் மத்திய அணுசக்தி துறை குழுவினர் அங்கு உள்ள பாறைகளில் கனிம வளம் குறித்து ஆய்வு நடத்திய நிலையில், இதைக்கண்டித்து அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் திடீரென்று எதிர்ப்பு தெரிவித்தனர். முறையாக அனுமதி பெற்று தங்கள் கிராமத்தில் ஆய்வு நடத்தாமல் திடீரென ஆய்வு நடத்த கூடாது என கூறினர்.
இச்சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது .பின்னர் அங்கு வந்த கொட்டாம்பட்டி போலீஸார் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் வருவாய்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரச முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு கூடிய பொதுமக்கள் முறையாக அனுமதி பெற்று எங்களது கிராமத்தில் ஆய்வு நடத்தலாம் திடீர் என்று ஆய்வு நடத்தி எங்களுடைய விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என கருத்தை தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.