மதுரை அருகே நிதி நிறுவன ஊழியர்களை தாக்கி 166 சவரன் நகை, 1 லட்சம் பணம் கொள்ளை
மதுரை அருகே தனியார் நிறுவன ஊழியர்களை வழிமறித்து நகை, பணம் வழிப்பறி. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டியில் தேசிய நான்கு வழி சாலையில் சென்ற காரை மறித்து மர்ம நபர்கள் தங்க நகை மற்றும் ரூ ஒரு லட்சம் பணம் வழிப்பறி செய்துள்ளனர்.
கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி நான்கு வழி சாலையில் விழுப்புரத்தில் இருந்து மதுரை நோக்கி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நகை மற்றும் பணத்துடன் வந்து கொண்டிருந்த போது அவர்களை வழிமறித்து மர்ம நபர்கள் அரிவாளை காட்டி மிரட்டி அவர்களிடமிருந்த 1.3 கிலோ கிராம் எடையுள்ள 166 சவரன் தங்கநகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர். மேலும் ஊழியர்களின் காரையும கடத்தி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தனியார் நிறுவன ஊழியர்கள் கொட்டாம்பட்டி போலீசாரிடம் புகார் செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.