மதுரை: பரவையில் மருத்துவ முகாம்
- மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் நேரில் ஆய்வு.;
மதுரை மாவட்டத்தில் கொரானா நோய் பரவலை கட்டுப்படுத்தமாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் ஊராட்சிகள் பேரூராட்சிகள் நகராட்சிகள் மாநகராட்சிகள் அந்தந்த பகுதிகளில் மருத்துவ முகாம் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் பரவை கிராமத்தில் இன்று சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அணிஷ் சேகர் நேரில் சென்று பார்வையிட்டு பரவை கிராமம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், பரவை பேரூராட்சி செயல் அலுவலர் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.