மதுரை - தேனி இடையே முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில்: மே 27இல் தொடக்கம்

மதுரை - தேனி இடையே முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில் போக்குவரத்து மே 27ஆம் தேதி முதல் தொடங்குகிறது.-தெற்கு ரயில்வே துறை அறிவிப்பு;

Update: 2022-05-24 01:52 GMT

2011ஆம் ஆண்டு மதுரை - போடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. தற்போது மதுரை - தேனி இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. தேனி - போடி இடையே அகல ரயில் பாதை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மதுரை - தேனி இடையே மே 27ஆம் தேதி முதல் முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த விரைவு ரயில் மொத்தம் 12 பயணிகள் பெட்டியுடன் இயங்குகிறது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக காலை 9.35 மணிக்கு தேனி ரயில் நிலையத்துக்கு செல்லும்.  தேனி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் விரைவு ரயில், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி வழியாக மாலை 7.35 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தைச் சென்றடையும் . 

Tags:    

Similar News