ஊரடங்கு-வேலை இல்லாததால் புதுமணத்தம்பதிகள் விஷம் குடித்த பரிதாபம்-மதுரை
ஊரடங்கால் வேலை இல்லாமல், குடும்பம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் கணவன் மனைவி விஷம் குடித்ததில் மனைவி மரணம்.;
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம்.
மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்தவர் அந்தோணி லுார்துசாமி; எல்லீஸ்நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த செந்தில், 25, என்பவர் வேலை செய்து வந்தார். அந்தோணி லுார்துசாமி மகள் ஜெனிபர், 26, என்பவருடன் காதல் ஏற்பட்டது. இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி,கடந்த 20 நாட்களுக்கு முன் திருமணம்செய்துகொண்டு சம்மட்டிபுரத்தில் வசித்து வந்தனர்..
ஊரடங்கால் செந்திலுக்கு வேலை இல்லாமல், குடும்பம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இருவீட்டாரின் ஆதரவு இல்லாததால், மே 19-ல் இருவரும் விஷம் குடித்தனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெனிபர் இறந்தார்.இது குறித்து மதுரை நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.