மதுரை உயர்நீதிமன்ற வழக்கு: கன்னியாகுமரி ஆட்சியர் பதில் தர உத்தரவு

மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதில் தர உத்தரவு.

Update: 2022-04-07 13:43 GMT

குமரி மாவட்டத்தை சேர்ந்த மரியா அல்பி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் எனது கணவர் ராபர்ட் சேவியர் ராஜ் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்றில் பணியாற்றி வந்தார். நைஜீரியா கடல் பகுதியில் இருந்த போது பெரும் தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் 5 ஊழியர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 4 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் எனது கணவரின் உடல் மீட்கப்படவில்லை . எனது கணவரை இறந்ததாக நைஜீரியா காவல்துறை தரப்பில் இருந்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எனது கணவரின் இறப்பு சான்றிதழ் தற்போது வரை வழங்கப்படவில்லை.

கணவர் இறப்பு சான்றிதழ் வழங்க கோரி அதிகாரிகளுக்கு பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவல்துறையின் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எனது கணவர் இறப்பு சான்றிதழை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார் . இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நைஜீரிய காவல்துறையினரின் அடிப்படையில் மனுதாரர் கணவரின் இறப்பு சான்றிதழை வழங்க என்ன தடை உள்ளது? என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News