மதுரை அரசு மருத்துவமனை: மருத்துவர்கள், செவிலியர்கள் 15 பேருக்கு கொரோனா தொற்று

மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 15 பேருக்கு கொரோனா தொற்று.

Update: 2021-05-22 16:56 GMT

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்கள பணியாளர்களாக பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்.

கொரோனா 2ஆவது அலை தொற்றின் தீவிரம் சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் மட்டும் நேற்றைய புள்ளிவிவரப்படி 53 ஆயிரத்து 243 பேர் கரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 12 ஆயிரத்து 306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 757 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக மதுரையில் 1500 லிருந்து 2000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் கொரோன பரவல் சராசரியாக 13 சதவீதமாக உள்ளது. 192 இடங்கள் கட்டுப்படுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ பாதிப்பு அதிகரிப்பால் சிகிச்சை பெருவதற்கான ஆக்சிஜன் படுக்கைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிரம்பியதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக தோப்பூரில் 500 படுக்கைகள் கொண்ட கரோன சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. திரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று திறந்து வைத்துள்ளார்.

இந் நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிவரும் 10 மருத்துவர்கள் மற்றும் 5 செவிலியர்கள் உட்பட 15 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பிற செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களும் பீதிக்கு ஆளாகியுள்ளனர்.

Tags:    

Similar News