மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் மற்றும் சுற்றுலா தகவல் மையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு;

Update: 2021-07-13 12:08 GMT

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் பெரியார் பேருந்து நிலையம் மேம்படுத்துதல், பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் பல்லடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைத்தல், வைகை ஆற்றங்கரையினை மேம்படுத்துதல், புராதன சின்னங்களை இணைக்கும் புராதன வழித்தடங்கள் அமைத்தல், புதுமண்டபத்தில்; உள்ள கடைகளை குன்னத்தூர் சத்திரத்தில் மாற்றி அமைத்தல், மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகள் மற்றும் மீனாட்சி பூங்காவினை மேம்படுத்துதல், ஜான்சிராணி பூங்கா பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான வருகை மையம் மற்றும் அங்காடி அமைத்தல், திருமலை நாயக்கர் மகாலை சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி ,பெரியார் பேருந்து நிலையத்தில் ரூ.167.06 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணியினை ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு, பெரியார் பேருந்து நிலையத்தில் நகரப்பேருந்துகள் வந்து செல்லும் மற்றும் நிறுத்துவதற்கான இடங்கள் குறித்தும், பேருந்து நிலையத்தில் மழைக்காலங்களில் மழைநீர் சீராக செல்வதற்கு, அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணியினையும், பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தில் தண்ணீர் தேங்காதவாறு மழைநீர் வடிகாலுக்கு கொண்டு செல்லுமாறு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், நடைபெற்று வரும் ஏனைய பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பெரியார் பேருந்து நிலையம் அருகில் ரூ.2கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தகவல் மையத்தினையும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, நகரப் பொறியாளர் (பொ) அரசு, உதவி செயற்பொறியாளர்கள் முருகேசபாண்டியன், ஆரோக்கிய சேவியர், உதவிப் பொறியாளர்கள் பாலகுருநாதன், ஆறுமுகம், தியாகராசன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News