அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு...

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-01-09 17:17 GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர். (கோப்பு படம்).

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், அவனியாபும், பாலமேடு பகுதிகளில் நடைபெற உள்ள ஜல்லக்கட்டு போட்டிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

மதுரை மாவட்டம், மதுரை தெற்கு வட்டம், அவனியாபுரம் கிராமத்தில் வருகிற 15.01.2023 அன்றும் வாடிப்பட்டி வட்டம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் கிராமங்களில் முறையே 16.01.2023 மற்றும் 17.01.2023 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு அரசால் பிறப்பிக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.

அந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள உள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 10.01.2023 தேதி நண்பகல் 12.00 முதல் 12.01.2023 தேதி மாலை 05.00 மணி முடிய பதிவு செய்திடல் வேண்டும். மேலும், ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள உள்ள மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் தங்களது கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், வயதிற்கான சான்றிதழ், கொரானா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் முதலியவைகளை பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

மேலும், மாடுபிடி வீரர்கள் அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியில் இருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCP Test) என்பதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதே போல் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும். அந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள உள்ள மாட்டின் உரிமையாளர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 10.01.2023 தேதி நண்பகல் 12.00 முதல் 12.01.2023 தேதி மாலை 5.00 மணி முடிய பதிவு செய்திடல் வேண்டும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்கள் இருவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியில் இருந்து இரண்டு நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (RT PCR Test) என்பதற்கான சான்றினை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பிறகு தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News