மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுப்புற கிராமங்களில் கலெக்டர் அனிஷ்சேகர் ஆய்வு

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை, மதுரை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.

Update: 2021-06-11 02:48 GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் - ஆய்வின் போது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை, மதுரை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது. அந்த வகையில் , மதுரை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அந்தவகையில் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் ஆட்டுக்குளம் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் காய்ச்சல் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதை மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கோட்டநத்தம்பட்டிகிராமத்திற்கு சென்று குரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நடைபெற்று வரும் காய்ச்சல் கணக்கெடுப்பு பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்ற மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் தேவன்பெருமாள்பட்டி முதல் புதுப்பட்டி வரை ஊரக வளர்ச்சி முகமை மூலம் 3140 மீட்டர் நீளத்தில் ஒரு கோடியே இரண்டு லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், பேரூராட்சிகள் துறை உதவி இயக்குனர் செல்லத்துரை மேலூர் வட்டார மருத்துவ அலுவலர் சிவனேசன் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News