மதுரையில் வரும் 6ம் தேதி குடிநீர் சப்ளை நிறுத்தம்: மாநகராட்சி ஆணையர்

புதிய இரும்பு குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற இருப்பதால், மதுரை மாநகராட்சி பகுதியில் நவ.6ம் தேதி குடிநீர் சப்ளை நிறுத்தப்படுகிறது.

Update: 2021-11-03 07:15 GMT
கோப்பு படம் 

மதுரை மாநகராட்சியில், வைகை குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும், இரண்டாம் வைகை குடிநீர் திட்டத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயில்,  ஆரப்பாளையம் அம்மா பாலம் அருகில் வைகை ஆற்றின் தென்கரையில் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்பு மற்றும் சுந்தரராஜபுரம் மேல்நிலைத் தொட்டி அருகில் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்புகளை சரி செய்ய, உடைந்த குழாய்களை மாற்றி அமைக்கப்படுகிறது.

இரும்பு குழாய்கள் பதித்து இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வரும் 06.11.2021 (சனிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் , கீழ்க்கண்ட பகுதிகளில் குடிநீர் நிறுத்தம் செய்யப்படுகிறது. வடகரைப் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வார்டு எண்.6 முதல் 9, 27 மற்றும் 33 முதல் 47 வரை அதாவது, அருள்தாஸ்புரம், தத்தனேரி, செல்லூர், மீனாட்சிபுரம், குலமங்கலம் ரோடு, கோரிப்பாளையம், ரேஸ் கோர்ஸ் காலனி, டி.ஆர்.ஓ.காலனி, பி அண்டு டி காலனி, பீ.பீ.குளம், நரிமேடு, புதூர், அண்ணாநகர், கே.கே.நகர், மதிச்சியம், கரும்பாலை மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

தென்கரைப் பகுதியில் வார்டு எண்.19, 28, 63, 64, 77 மற்றும் 88 முதல் ௯௩ வரையில் உள்ள பகுதிகளுக்கும் அதாவது ஹெச்.எம்.எஸ்.காலனி, விராட்டிப்பத்து, பொன்மேனி, சம்மட்டிபுரம், சுந்தரராஜபுரம், ஜெய்ஹிந்துபுரம், டி.வி.எஸ்.நகர், முத்துப்பட்டி, அழகப்பன் நகர், கீரைத்துறை, வில்லாபுரம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.  எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து,  சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அத்தியாவசியமான வார்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று, ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News