மதுரையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மதுரையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Update: 2021-10-29 15:35 GMT

மதுரை தொண்டி சாலையில் பாண்டி கோயில் அருகே கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மதுரை நகரில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை சார்பில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு செய்தார்.

மதுரை நகரில் குருவிக்காரன் சாலையில் கட்டப்பட்டு வரும், மேம்பாலம் குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயனிடம் கேட்டறிந்தார்.

முன்னதாக, மதுரை தொண்டி சாலையில் பாண்டி கோயில் அருகே கட்டப்பட்டு வரும் உயர் மட்டப் பாலத்தை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோருடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து, மதுரை வைகை ஆற்றில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளையும், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். மதுரை எம்.பி. வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பூமிநாதன், வெங்கடேசன், கோ.தளபதி, மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News