மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் தரிசனம் செய்த சசிகலா
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தந்த சசிகலாவிற்கு அதிமுக, அமமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்;
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் மதுரை வீரன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகலா.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா கடந்த ஆண்டு ஜனவரி இறுதியில் விடுதலையானார். அதன் பிறகு சென்னை வந்த சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார்.
இருப்பினும் தனது ஆதரவாளர்களை சசிகலா நேரில் சந்தித்து பேசினர். இதற்கிடையே, மாவட்டம் தோறும் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்து வருகிறார். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும் போதெல்லாம் அங்கு உள்ள மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனையும் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்ட சசிகலா உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சசிகலா வருகை தந்தார்.கோவிலுக்கு வருகை தந்த சசிகலாவிற்கு அதிமுக, அமமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து கோவிலில் அரைமணி நேர சாமி தரிசனம் செய்த சசிகலா கிழக்கு கோபுரம் அருகில் உள்ள மதுரை வீரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்கள் சசிகலாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் காரில் இருந்தபடியே சசிகலா குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் சாக்லேட்டுக்களை கொடுத்தார்.