பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவர் கைது

மதுரை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய 2 பேரை போக்ஸோ சட்டத்தின் மூலம் போலீஸார் கைது செய்தனர்

Update: 2022-05-07 06:15 GMT

மதுரை அருகே எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த  வழக்கில்  இரண்டு பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தில், திருப்பரங்குன்றம் தாலுகாவில் உள்ள அவனியாபுரத்தைச் சேர்ந்தவ 15 வயது  மாணவி  அருகில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தந்தையின் நெருங்கிய நண்பரான ரமேஷ் என்பவர், சிறுமியின் குடும்பத்திற்கு தேவையான பொருளாதார  உதவிகளையும் செய்து வந்தாராம் . இந்த நிலையில், சிறுமி தனக்கு வயிற்று வலி  இருப்பதாகக்கூறியுள்ளார். இதையடுத்து , அவரது தாயார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.  அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஐந்து மாத கர்ப்பிணியாக  இருப்பதாக தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த  அப்பெண்ணின் தாய்  திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியிடம் நடத்திய விசாரணையில், சிறுமியின் வீட்டுக்கு அருகே உள்ள முருகேசன் என்பவர் சிறுமியை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சிறுமியின் தந்தையின் நண்பர் ரமேஷ், இதை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும் என்றால் ,தனது ஆசைக்கும் இணங்க வேண்டும் என்று சொல்லி அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். இதில், சிறுமி 5 மாத கர்ப்பமாக இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது .

இதை அடுத்து, முருகேசன் மீதும் ரமேஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News