முன்விரோதத்தில் வாலிபர் மீது கல்லால் தாக்கிய நபர் கைது

மதுரையில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்

Update: 2022-05-08 08:30 GMT

கரிமேட்டில் முன்விரோதத்தில் வாலிபர் மீது கல்லால் தாக்கிய மற்றொரு வாலிபர் கைது :

மேல அண்ணா தோப்பு வைச் சேர்ந்தவர் க. சிவராம்குமார்(19.) இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த குணா என்ற ஸ்டேட் குணாவுக்கும் 32. முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ,டீச்சர்ஸ் காலனி வழியாக சென்ற சிவராம்குமாரை, குணாவும் அவருடைய நண்பர் கார்த்திகேயன்(30 ). ஆகிய இருவரும் வழிமறித்து அவதூறாக பேசி கல்லால் தாக்கினர். இந்த சம்பவம் குறித்து, சிவராம்குமார் கரிமேடு போலீசில் புகார் செய்தார்‌. போலீசார்  வழக்குப் பதிவு செய்து, அவரை தாக்கிய குணாவை கைது செய்தனர்.  மற்றொரு நபரை கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.

பைபாஸ் ரோட்டில்   வாலிபரிடம் கத்தி முனையில் பணம் செயின் பறிப்பு:

மதுரை பைபாஸ் ரோட்டில் நடந்து சென்ற வாலிபரிடம் கத்திமுனையில் மிரட்டி பணம் நகை செல்போன் பறித்த 3 ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை அருள் நகரை சேர்ந்தவர் ராஜசேகர்(30.) இவர், பைபாஸ் ரோடு  கருப்பசாமி கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப் போது, ஒரே பைக்கில் வந்த 3 ஆசாமிகள் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த செயின் ஒன்று செல்போன், பணம் ரூபாய் 5 ஆயிரத்தை வழிப்பறி செய்து தப்பி விட்டனர். இந்த சம்பவம் குறித்து, ராஜசேகர் எஸ். எஸ் .காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பைக் ஆசாமிகளை  மூவரையும் தேடி வருகின்றனர்.

மதுரை பைபாஸ் ரோட்டில்  சிறுவனிடம் கத்திமுனையில் செல்போன் பறிப்பு:

பொன்மேனி 2-வது தெரு சேர்ந்தவர் செண்பகமூர்த்தி மகன் கோபிநாத்(16.) இவர் பைபாஸ் ரோட்டில் சென்ற போது ,இரண்டு அடையாளம் தெரியாத வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி ரூபாய் 5ஆயிரம் மதிப்புள்ள செல்போனை சிறுவனிடம் இருந்து பறித்துச் சென்றுவிட்டனர்.  இந்த சம்பவம் குறித்து, கோபிநாத் எஸ் .எஸ்.காலனி போலீசார்  புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன் பறித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

கோரிப்பாளையத்தில்  வீடு புகுந்து நகை பணம் திருட்டு :

மதுரை கோரிப்பாளையத்தில் வீடு புகுந்து நகை பணம் திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர் . கோரிப்பாளையம் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் ஜமால் பாதுஷா மகன் தாவுத் கான் 29.இவர் வீடு புகுந்த மர்ம நபர் பீரோவில் வைத்திருந்த  ஒன்றேமுக்கால் பவுன் நகை பணம் ரூபாய் 3500ஐ சென்றுவிட்டனர்.இந்த திருட்டு குறித்து, தாவூத்கான் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையில்  தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல்:

மதுரை தபால் தந்தி நகர் சீதாலட்சுமி நகரை சேர்ந்தவர் மாசிலாமணி 56. குடும்ப பிரச்சனை காரணமாக இவர், மன உளைச்சலில் இருந்து வந்தார்.  இந்த நிலையில்,  நத்தம் மெயின் ரோடு பேங்க் காலனியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.இந்த தகவல் அறிந்த தல்லாகுளம் சப்-இன்ஸ்பெக்டர் சிவகாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அவரிடம் நைசாக பேசி அவரை சமாதானம் செய்து தண்ணீர் தொட்டியில் இறங்க வைத்தார். பின்னர்   தற்கொலைகொலை மிரட்டல் விடுத்தற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை, கைது செய்தனர்.

Tags:    

Similar News