மதுரை மாநகராட்சியில் உலக மலேரியா ஒழிப்பு உறுதிமொழி
மதுரை மாநகராட்சியில் உலக மலேரியா தினம் உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் ஏற்கப்பட்டது;
மதுரை மாநகராட்சியில் மலேரியா ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் "உலக மலேரியா தினம்" உறுதிமொழியினை, மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் கார்த்திகேயன், துணை மேயர் நாகராஜன், ஆகியோர் முன்னிலையில் அனைத்து பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் மரு.சங்கீதா, நகர் நல அலுவலர் மரு.ராஜா, உதவி ஆணையாளர் (வருவாய்) (பொ) தட்சிணாமூர்த்தி, உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.