மதுரையில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மனுத்தாக்கல்
மதுரை மாநகராட்சி 37-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மக்கள் நீதி மைய வேட்பாளர் மனுத்தாக்கல் செய்தார்;
மக்கள் நீதி மைய வேட்பாளர் முத்துராமன் மனுத்தாக்கல் செய்தார்
நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, மதுரை மாநகராட்சிக்கு கவுன்சிலர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.
மதுரை மாநகராட்சி 37-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, மதுரை அண்ணாநகர் முத்துராமன் மனுத் தாக்கல் செய்தார். இவர், மக்கள் நீதி மையத்தின் வேட்பாளராக இருந்தாலும், கட்சி பாகுபாடின்றி, அனைத்து தரப்பு மக்களிடம் நெருங்கி பழகக்கூடியவர். மேலும், பல ஆண்டுகளாக சமூக சேவைகள் பல ஆற்றி வருகிறார். இவருக்கு மக்கள் ஆதரவும் ஒரளவு உள்ளது.
இவர், மனுத்தாக்கல் செய்தபோது, மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள் அயூப்கான், குணாஅலி, நாகேந்திரன், சந்திரன், பூஜாரி மகாலிங்கம், நாராயணன், அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.