மதுரை மாநகராட்சியில் வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆணையாளர்
மதுரை மாநகராட்சியில் வாக்காளர் பட்டியலை ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் வெளியிட்டார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் ஃ ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன், வெளியிட்டார். மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2021-க்கான புகைப்பட வாக்காளர்கள் பட்டியலை, தேர்தல் நடத்தும் அலுவலரான ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்படி, மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 100 வார்டுகளில் ஆண்கள் 6,25,617, பெண்கள் 6,75,139, மூன்றாம் பாலினத்தவர் 138 என மொத்தம் 13,27,894 வாக்காளர்கள் உள்ளனர். மதுரை மாநகராட்சியில் மொத்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை, 1317 என உள்ளது.
இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையாளர்கள் தட்சிணாமூர்த்தி, சுரேஷ்குமார், அமிர்தலிங்கம், உதவி ஆணையாளர் (வருவாய்) ரெங்கராஜன், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) சுப்புதாய், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற செயலாளர் (பொ) ஜார்ஜ் ஆலிவர் லாரன்ஸ் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.