மதுரையில் வணிக வளாகம் கட்டும் பணி: மாநகராட்சி ஆணையர் ஆய்வு
பெரியார் பேருந்து நிலையத்தின் கிழக்கு பகுதியில் ரூ.119.56 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது;
மதுரை மாநகராட்சியில் நடைபெறும் வணிக வளாக கட்டுமான பணியை ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டுமான பணிகளை ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றில் ,பெரியார் பேருந்து நிலையம் சுற்றுலா தகவல் மையம் ஜான்சிராணி பூங்கா குன்னத்தூர் சத்திரம் ஆகியவற்றில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ,பெரியார் பேருந்து நிலையத்தின் கிழக்கு பகுதியில் ரூ.119.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில் மூன்று அடுக்கு மாடிகளில் 462 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
இவ்வளாகத்தில் தரைத்தளத்திற்கு கீழ் முதல் தளத்தில் 371 நான்கு சக்கர வாகனங்களும் தரைத்தளத்திற்கு கீழ் 2வது தளத்தில் சுமார் 4865 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள் லிப்ட் வசதி, சாய்வுதளம், நடைபாதை, மின்விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை, ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு எஞ்சியுள்ள கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, நகரப்பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் பாஸ்கரன் மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உதவிப் பொறியாளர்கள் ஆறுமுகம் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.