பள்ளிக்கு வந்த மாணவர்களை வரவேற்ற மதுரை மாநகராட்சி ஆணையர்

பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாடத்திட்டங்கள் மற்றும் பொது அறிவு குறித்து ஆணையாளர் கலந்துரையாடினார்;

Update: 2021-11-01 14:15 GMT

மதுரையில் பள்ளிக்கு வந்க மாணவிகளை வரவேற்ற மாநகராட்சி ஆணையாளர் க.பா.கார்த்திகேயன்

பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை மதுரை மாநகராட்சி ஆணையர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மதுரை மாநகராட்சி சிங்காரத் தோப்பு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன்  பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர், உத்தரவின்படி தமிழகம் முழுவதும் 01.11.2021 முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதற்கு உத்தரவிட்டு உள்ளார்கள். அதன்படி, மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் அனைத்து பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிருமி நாசினி தெளித்தல், முகக்கவசம் தனிநபர் இடைவெளி,கை கழுவும் வசதிகள் ஏற்படுத்துதல் வெப்பமானி பரிசோதனை செய்தல் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் வளாகங்கள் சுத்தம் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று சிங்காரத் தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆணையாளர் நேரில் சென்று அப்பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மேலும், மறைமலை அடிகளார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வருகை புரிந்த மாணவிகளுக்கு, வெப்பமானி பரிசோதனை மேற்கொள்வதையும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அப்பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாடத்திட்டங்கள் மற்றும் பொது அறிவு குறித்து ஆணையாளர், கலந்துரையாடினார்.

தமிழக அரசின் உத்தரவின்படி, வழிகாட்டு நெறிமுறைகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வருவதால், முதல் 15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, ஓவியம் வரைந்து வர்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் போன்ற பல்வேறு மனமகிழ்ச்சி தரும் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் முக்கியமான பாட கருத்துகளை உள்ளடக்கிய புத்தாக்க பயிற்சிகளையும் அடுத்தடுத்து முறையாக செயல்படுத்திய பிறகு பாடத்திட்டத்தை தொடங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆணையாளர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, கல்வி அலுவலர் ஆதிராமசுப்பு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன்,, தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News