மதுரை நகர் பகுதியில் குப்பைகள் அகற்றும் பணித் தொடக்கம்

தீபாவளியான நேற்றைய தினம் 542 டன் குப்பை என இரு நாட்களில் 1329டன் குப்பைகள் அள்ளப்பட்டுள்ளது;

Update: 2021-11-05 12:00 GMT

பைல் படம்

மதுரை மாநகர் பகுதியில் குப்பைகள் அள்ளும் பணி தொடக்கம்:

தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100வார்டு பகுதிகளில் கடந்த 3ஆம் தேதி 787டன் குப்பையும், தீபாவளியான நேற்றைய தினம் 542 டன் குப்பை என இரு நாட்களில் 1329டன் குப்பைகள் அள்ளப்பட்டுள்ளது.தீபாவளி இரவில் வெடிக்கப்பட்ட பட்டாசு குப்பைகளை அகற்றும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக, கூடுதலாக தூய்மை பணியாளர்கள் மற்றும் கூடுதல் வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Tags:    

Similar News