புத்தர் ஜயந்தி: வரும் 16-ல் இறைச்சி விற்க தடை விதிப்பதாக மாநகராட்சி அறிவிப்பு

மதுரை மாநகராட்சியில் புத்தர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 16 -ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2022-05-14 08:30 GMT

மதுரை நகரில் இம் மாதம் 16-ல் இறைச்சி விற்க தடை:

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசின் அரசாணை (நகராட்சி நிர்வாக ஆணையர் கடிதத்தின்படி) புத்தர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 16.05.2022 (திங்கட்கிழமை) அன்று இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில், ஆடு, மாடு, கோழி, மற்றும் பன்றி போன்ற உள்ளிட்டவற்றின் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. மேற்கண்ட கடைகளை திறந்து வைக்கவும் கூடாது.மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதாரப் பிரிவு சட்டம் 1939ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News