குறைதீர் முகாமில் அளிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை: ஆணையர் உறுதி

மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்கள் சார்பில் 175 மனுக்கள் மாநகராட்சி ஆணையாளரிடம் அளிக்கப்பட்டது;

Update: 2021-11-17 08:00 GMT

 மதுரை மாநகராட்சி மண்டலம் 3 -ல் நடந்த குறை தீர் முகாமில் மனு அளித்த பொதுமக்கள்

 மதுரையில் நடந்த  மக்கள் குறைதீர் முகாமில் பொதுமக்கள் சார்பில்  175 மனுக்கள்  மாநகராட்சி ஆணையாளரிடம் அளிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன், தலைமையில் இன்று நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.3 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில், குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சொத்து வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக 175 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து ஆணையாளர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது.

பொதுமக்க ளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து, பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு ஆணையாளர்  உத்தரவிட்டார். மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இம்முகாமில், உதவி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற் பொறியாளர் அலெக்ஸ்சாண்டர், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர் வீரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News