மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை முதல் பொதுதரிசனத்துக்கு கிழக்குவாசலில் அனுமதி

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை முதல் பக்தர்கள் பொதுதரிசனத்துக்கு கிழக்குவாசலில் அனுமதிக்கப்படுவார்கள்.

Update: 2021-07-04 11:53 GMT

கோப்பு படம்

ஊரடங்கு தளர்வு காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும், திங்கள்கிழமை முதல் பக்தர்கள் பொது தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருவதுடன், கோயில் வாசலில் கைகளை சுத்தம் செய்து வரவேண்டும்; தேங்காய் உடைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரையை பொறுத்த மட்டில் அழகர்கோவில், திருப்பரங்குன்றம், மீனாட்சியம்மன் கோயில்களில் தற்போது நித்ய பூஜைகள் மட்டுமே நடைபெறுகிறது. சாலையோர சிறு கோயில்களில் கடந்த பத்து நாட்களாக, சதுர்த்தி, கார்த்திகை, பௌர்ணமி போன்ற அபிஷேகம் நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், பக்தர்கள் பொது தரிசனத்திற்கு கிழக்கு நுழைவுவாயில் வழியாக மட்டும் அனுமதிக்கப்படுவர். ரூ.100/- ரூ.50/- விரைவு தரிசன கட்டணச்சீட்டு பெறும் பக்தர்கள், தெற்கு கோபுர நுழைவுவாயில் வழியாக மட்டும் அனுமதிக்கப்படுவர் என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News