மதுரை மஹால் பகுதிகளில் மதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

Update: 2021-03-29 08:23 GMT

மதுரை மஹால் 74வது வார்டு பகுதியில் இன்று சௌராஷ்ட்ரா சமூகத்தினர் பகுதிகளில் உள்ள வீடுகளில் இன்று திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி சௌராஷ்ட்ரா சமூக நிர்வாகிகள் திமுக மதிமுக காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கூட்டணி கட்சி மகளிர்கள் திரளாக பங்கேற்று மதிமுக வேட்பாளர் புதூர் மு. பூமி நாதனுக்கு வாக்குகேட்டு துண்டு பிரசுரம் வழங்கி சௌராஷ்ட்ரா சமூகத்தினரிடம் வாக்கு சேகரித்தனர். அச் சமூகத்தினர் ஆரத்தியேடுத்து வரவேற்றனர், இன்று கோலி பண்டிகை கொண்டிய அப்பகுதி வடமாநில இளைஞர்களிடம் பூமிநாதன் வாக்குசேகரித்தார்.

Tags:    

Similar News