பயணக்கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்று நூல்கள் பல எழுதிய எழுத்தாளர் கர்ணன்
சிறுகதைத் தொகுப்புகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் கர்ணன் நினைவுநாள்.
பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதிய எழுத்தாளர் கர்ணன் மறைந்தநாள்
எழுத்தாளர் கர்ணன் என்பவர் சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். மதுரையில் வசித்து வந்த இவர் எழுதிய "அவர்கள் எங்கே போனார்கள்?" எனும் நூல் தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிற சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
கர்ணன் 1938 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கர்ணன் பரஞ்சோதி, செல்லம்மாள் தம்பதியினரின் புதல்வர். இவர், தொழில் ரீதியாக தையற்கலைஞர் ஆவார். கர்ணன் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டுக் கால் ஊனமானவர்.
கர்ணன் 2020 ஜூலை 20 ம் தேதி அன்று மதுரையில் காலமானார். இவரது மனைவி ரஞ்சிதம் 2012 ம் ஆண்டு காலமானார். போலியோவால் பாதிக்கப்பட்டுக் கால் ஊனமான கர்ணன் மதுரை அருகே செல்லூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.தமிழக அரசு இவருக்கு மாதம் மூவாயிரன் ரூபாய் உதவித்தொகை வழங்கி வந்தது. அவருடன் அவரது இரண்டு வாய்பேச முடியாத சகோதரிகள் வசித்து வந்தார்கள்.